ஊட்டி:உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, 'ராஜேந்திரன் டயாபடிஸ் சென்டர், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் நீலகிரி' ஆகியவை, இணைந்து இலவச சர்க்கரை நோய் முகாமை நடத்துகின்றன.அதில், சர்க்களை நோய் விழிப்புணர்வு மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. 40 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் ரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.இன்று, காலை 8:00 மணி முதல், கோடமலை கிராமம் குன்னுார், ஊட்டி ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட், கோத்தகிரி ஜான்சன் ஸ்கொயர், விஜயா மருத்துவமனை ஊட்டி, நிர்மலா நர்சிங் ேஹாம் ஊட்டி, பிங்கர் போஸ்ட் ஊட்டி, மற்றும் சிவ சக்தி மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.