| அடுத்த சுற்று ஆரம்பம்! பி.ஏ.பி., பாசன 2வது முறை நீர் திறப்பு நிறைவு Dinamalar
அடுத்த சுற்று ஆரம்பம்! பி.ஏ.பி., பாசன 2வது முறை நீர் திறப்பு நிறைவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:43

உடுமலை:பி.ஏ.பி., நான்காம் மண்டலம் பாசனத்தில், இரண்டாம் சுற்று நீர் திறப்பு நாளை நிறைவடைகிறது; ஐந்து நாட்கள் இடைவெளியில், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


பாசன நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரித்து, தண்ணீர் வழங்கப்படுகிறது.நான்காம் மண்டல பாசனத்தின் கீழ், 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலங்களுக்கு, 135 நாள் மண்டல காலத்தில், சுற்றுக்கு, 1,900 கன அடி வீதம், நான்கு சுற்றுக்களில், 7,900 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது.திருமூர்த்தி அணையிலிருந்து, நான்காம் மண்டல பாசனத்திற்கு, கடந்த, செப்.,25ல் தண்ணீர் திறக்கப்பட்டு, 28 ம் தேதி முதல் பிரதான கால்வாயில், முழுமையான அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, முதல் சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு, இரண்டாம் சுற்றுக்கு, அக்.,26 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இரு நாட்களாக, உடுமலை, புதுப்பாளையம் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, பிரதான கால்வாயில் நீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்று நீர் திறப்பு, நாளை நிறைவு பெறுகிறது. மூன்றாம் சுற்றுக்கு, ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.நான்காம் மண்டலத்திற்கு நான்கு சுற்றுக்களையும், ஜன.,10 க்குள் முடிக்கவும், பொங்கல் பண்டிகைக்கு பிறகு முதல் மண்டல பாசனத்தை துவக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


அணை நிலவரம் :திருமூர்த்தி அணையில், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில், 44.17 அடி நீர் மட்டம் இருந்தது. நீர் இருப்பு, 1,298.24 மில்லியன் கன அடியாக இருந்தது.அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு, 810 கன அடி தண்ணீரும், பாலாற்றின் மூலம், 26 கன அடி என, 836 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, பிரதான கால்வாயில், 615 கன அடி நீரும், தளி கால்வாயில், 32 கன அடி நீரும், குடிநீருக்கு, 21 கன அடி நீரும், திறந்து விடப்பட்டிருந்தது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X