இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்: தனியார் துறை சார்பில் நாளை நடக்கிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:43

உடுமலை:மடத்துக்குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை, 16ம் தேதி நடக்கிறது.திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இம்முகாமை நடத்துகிறது.வேலைவாய்ப்பு முகாம், நாளை, 16 ம்தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தொழிற்பயிற்சி பெற்ற, பட்டயபடிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை முடித்த 18 வயது முதல் 40 வயது வரையுள்ளவர்கள் பங்கேற்கலாம்.முகாமில், பங்கேற்பவர்கள், அவர்களின் சுய விபரம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் இரண்டு எடுத்து செல்ல வேண்டும். மேலும், முகாமில், வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் பயிற்சிகளிலும் பதிவு செய்யலாம்.முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, 0421-2971149, 94440-94396, மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் 0421 2218155 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X