தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:44

உடுமலை:உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச்சாவடி அலுவலராக பணியாற்ற விரும்புபவர்கள், விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை, உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில் தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் மற்றும் பொருட்களின் விபரம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக, வெவ்வேறு துறைகளிலிருந்தும், ஓட்டுச்சாவடி அலுவலர்களாக பணிசெய்ய உள்ளவர்கள், தங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைனில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மூன்று ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளன. குடிமங்கலம், மடத்துக்குளம் மற்றும் உடுமலை, மாவட்ட வார்டுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக, ஊரக வாழ்வாதார இயக்க, மாவட்ட திட்ட அலுவலர் கோமகன், நியமிக்கப்பட்டுள்ளார். உடுமலை ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக, ராஜேஸ்வரி (மடத்துக்குளம், வேளாண் உதவி இயக்குனர்), குடிமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினருக்கான தேர்தல் அலுவலராக, ராதாகிருஷ்ணன்(மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்), மடத்துக்குளத்துக்கு, சிவானந்த் (நெடுஞ்சாலைத்துறை, உதவி கோட்டப்பொறியாளர், திருப்பூர்) உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்தந்த ஒன்றியங்களின் பி.டி.ஓ.,க்கள்(வட்டார ஊராட்சிகள்), ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான, தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X