| சிதிலமடைந்த பிரதான கால்வாயை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல் Dinamalar
சிதிலமடைந்த பிரதான கால்வாயை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:44

உடுமலை:பி.ஏ.பி.,பிரதான கால்வாயில், ஏழு கி.மீ., துாரம் சேதமடைந்துள்ளதால், உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உடுமலை ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார்.இதில், பி.ஏ.பி.,பாசன திட்டத்தில், நிலுவையிலுள்ள ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை உடனடியாக கட்டவும், பிரதான கால்வாயில், முழுவதும் சேதமடைந்துள்ள, 1.6 கி.மீ.,முதல் முதல் 7 கி.மீ.,துாரம் வரை உள்ள பகுதியை உடனடியாக சரி செய்யவும், அதற்கான நிதியை அரசு ஒதுக்கவும் வேண்டும்.தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்யவும், புதிய கடன்கள் வழங்கவும், விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும்.படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிர்களை காப்பாற்ற, மானிய விலையில் மருந்துகள், உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். உடுமலை தினசரி சந்தை வளாகத்தில், உரிய இட வசதியும், சுங்க கட்டணத்தையும் வரைமுறைப்படுத்த வேண்டும்.வறட்சி, நோய்த்தாக்குதல் காரணமாக, தேங்காய் உற்பத்தி பாதித்துள்ள நிலையில், விலை குறைந்து வருகிறது.ஒரு கிலோ கொப்பரை, 150 ரூபாயாக நிர்ணயித்து, அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில துணை தலைவர் மதுசூதனன், மாவட்ட தலைவர் பரமசிவம், செயலாளர் குமார், உடுமலை கமிட்டி செயலாளர் பாலதண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X