கோவை:அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகள் தினவிழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், தனித்திறன் போட்டிகள், கருத்தரங்கு என, குழந்தைகளை குதுாகலமாக்கும் பல்வேறு நிகழ்வுகள் பள்ளிதோறும் அரங்கேறின. குழந்தைகளை மகிழ்விக்க, நேற்று ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் பல பள்ளிகளில் நடந்தது.எல்ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிவெள்ளலுார் ரோடு, மகாலிங்கபுரத்தில் உள்ள, எல்ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் மணி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கணேஷ், பள்ளி துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியின் முன்னாள் மாணவி, கிருஷ்ணப்பிரியா கமலாக் ஷன் பங்கேற்று, பள்ளியில் பயின்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.சபர்பன் மேல்நிலைப்பள்ளிராம்நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினம் முன்னிட்டு, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு பேரணி நடந்தது. பள்ளியின் என்.சி.சி., மாணவ, மாணவியர் பங்கேற்ற இப்பேரணியை, பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய, பதாகைகளை ஏந்தி சென்றனர்.ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிசரவணம்பட்டி, ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, குழந்தைகள் தின நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடந்தது. பள்ளி செயலாளர் கற்பகஜோதி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சுகுமார் முன்னிலை வகித்தார். இதில், 165க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று, நாட்டின் முக்கிய தலைவர்கள், கேலிச்சித்திரங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வலம் வந்தனர்.ஆஸ்ரம் பள்ளியில் குழந்தைகள் தின விழாகோவைபுதுாரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினவிழா முன்னிட்டு விளையாட்டு போட்டி நடந்தது.பள்ளி தாளாளர் தேவேந்திரன் தலைமை வகித்தார்.சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற பிளஸ் 2 மாணவன் சதீஷ்குமார், சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற பிளஸ் 1 மாணவன் ஹரீஷ் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் சாதித்த மாணவ, மாணவியர் விளையாட்டு விழா ஜோதியை ஏற்றினர்.பள்ளி நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை சரண்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அரசு துணி வணிகர் பள்ளிராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், வழக்கத்திற்கு மாறாக, ஆசிரியர்கள் வழிபாட்டை நடத்தினர்.இறைவழிபாடு, நாட்டுப்பண், திருக்குறள் வாஷித்தல் என அனைத்தும் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது. உதவி தலைமையாசிரியை ரஹிமா பேகம் தலைமையில், கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. ஆசிரியர்கள் பாட்டு பாடி, கவிதை வாஷித்தனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளிமசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஓவியம் வரைதல் போட்டியுடன், விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்று, பூக்களை பரிசாக அளித்தனர்.முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், அனைத்து பள்ளிகளுக்கும், நேற்று குழந்தைகள் தின விழா வாழ்த்து கடிதம் அனுப்பினார்.