பல ஆண்டாக வாடகையில் இயங்கும் கிளை நூலகங்கள்: சொந்த கட்டடம் கட்ட வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
08:15

சேலம்: பல ஆண்டாக, வாடகையில் இயங்கும் கிளை நூலகங்கள் எட்டுக்கு, சொந்த கட்டடம் கட்ட, வாசகர்கள் வலியுறுத்தினர்.



சேலம் மாவட்டத்தில், அரசு பொது நூலகங்கள், 182 உள்ளன. மாவட்ட மைய நூலக கட்டுப்பாட்டில், கிளை, 65, ஊர்ப்புறம், 78, பகுதி நேரம் என, 38 நூலகங்கள் அடங்கும். அதில், 51 மட்டுமே, சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன. இலவச கட்டடங்களில், 122, வாடகை கட்டடங்களில், ஒன்பது நூலகங்கள் உள்ளன. கொங்கணாபுரம் கிளை நூலகம், 1960, ஜன., 28 முதல், வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. 2019 - 20ல், தொகுதி எம்.எல்.ஏ., - முதல்வர் சிறப்பு நிதியிலிருந்து, 13.5 லட்சம் ரூபாய் நிதி, நூலகத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதற்காக, 5 சென்ட் நிலம் தேர்வு செய்து, 595 சதுரடியில், தரைத்தளம் மட்டும் கொண்ட நூலக கட்டுமானப்பணி நடந்து வருகிறது. கெங்கவல்லியில், 1956 முதல், பேளூர், 1964 முதல், தீவட்டிப்பட்டி, 2000ம் ஆண்டு முதல், கிளை நூலகங்கள், வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. அதேபோல், கொத்தனூர், 2004, சேலத்தாம்பட்டி, 2008, பெரியவடகம்பட்டி, 2003, புத்தூர், 2004, வீரகனூர், 1970 முதல், கிளை நூலகங்கள் வாடகை கட்டடத்தில் உள்ளன. இந்த ஒன்பது நூலகங்களுக்கும், மாத வாடகை, 5,549 ரூபாய் செலவிடப்படுகிறது. சேவை நோக்கில் இயங்கும் நூலகத்துறைக்கு, வருமானம், சொற்ப அளவே உள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம் கூட, 70 சதவீதம், அரசு நிதியிலிருந்து ஒதுக்கப்படுகிறது. முதல்வர், தன் சொந்த தொகுதியில், இடம், நிதி ஒதுக்கி, நூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டுவதுபோல், மற்ற கிளை நூலகங்களுக்கு, தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி., நிதி ஒதுக்க வேண்டும். வருவாய், உள்ளாட்சி அதிகாரிகள், இடம் ஒதுக்கி, நூலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட, வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நடமாடும் நூலக வாகனம் 'கட்': சேலத்துக்கு, நடமாடும் நூலக வாகனம், 1999ல், வழங்கப்பட்டது. புத்தகங்களுடன் கூடிய இந்த வாகனம், நூலகம் இல்லாத கிராமங்களுக்கு சென்று, அப்பகுதி மக்களிடையே, வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், சுழற்சி அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, படிக்க வைக்க, ஒருமணி நேரம் ஒதுக்கப்படும். தற்போது, மொபைல் நூலக வாகனம் கண்டமாகிவிட்டதால், ஆறு மாதமாக நிறுத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து, அரசு கவனத்துக்கு எடுத்துச்சென்றும் நடவடிக்கை இல்லை.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X