வனத்தை ஒட்டிய இடங்களில் கல்குவாரிக்கு எதிர்ப்பு: தூத்துக்குடிக்கு ஒரு விதி; ஈரோட்டுக்கு ஒரு விதியா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
08:30

ஈரோடு: சத்தியமங்கலம், அந்தியூர், கோபி, பெருந்துறை, பவானி உள்ளிட்ட பகுதிகளில், 42 கல் குவாரிகள் உள்ளன. இதில் அதிகபட்சம், அந்தியூர் சட்டசபை தொகுதியில் மட்டும், 26 கல் குவாரிகள் உள்ளன. மலையடிவாரங்களில் கல் குவாரிகள் அமைக்க, மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இதில் வனப்பகுதியை ஒட்டி, 10 கி.மீ., சுற்றளவுக்கு கல் குவாரி அமைக்கக்கூடாது என்பது, முக்கியமான விதியாகும். ஆனால், மாநில அரசு மூலம், வனத்தை பாதிக்காத வகையில், சுற்றுச்சூழல் எல்லையை மாற்றி அமைத்துக் கொள்ள, சில விதிகள் உள்ளன. இதன்படி சத்தி, கோபி, அந்தியூர் பகுதிகளில் கல் குவாரி அமைக்க, ஏலம் நடத்த, ஈரோடு மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.


இதுகுறித்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் தளபதி கூறியதாவது: வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கல் குவாரி நடத்த அனுமதிக்க கூடாது. இதுகுறித்து கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில், எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். ஓராண்டாக, பல விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை இதை கண்டு கொள்ளாமல், சென்னம்பட்டி மலைப்பகுதியில், நான்கு கல் குவாரிகளுக்கு அடுத்த வாரம் ஏலம் நடத்த விண்ணப்பம் பெற்றுள்ளது. மத்திய அரசின் விதி, பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை மதிக்காமல், ஏலம் நடக்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனக்காப்பகம் பகுதியில், 10 கி.மீ., சுற்றளவுக்கு கல் குவாரிகள் அமைக்க தடை உள்ள நிலையில், ஈரோடு மாவட்ட புலிகள் காப்பகம் அமைந்துள்ள வனப்பகுதியில், எவ்வாறு விதிவிலக்கு வழங்க முடியும். இது விதி மீறலாகும். மீறி அனுமதி வழங்கினால், குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிகளால், விலங்குகள் தங்கள் இயல்பு நிலையை மாற்றி, விவசாயிகள், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து நாசப்படுத்தும். எனவேதான், விவசாய அமைப்பு சார்பில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X