ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளை, போலீசாரும் தொடங்கியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பதற்ற ஓட்டுச்சாவடிகள், பிரச்னைக்குரிய நபர்கள் குறித்து பட்டியல் தயாரித்து அனுப்ப, எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று நடந்த கூட்டத்தில், தனிப்பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பதற்ற வாக்குசாவடியெனில் அதற்கான காரணம், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலின்போது பிரச்னை நடந்ததா? கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, நடந்த பிரச்னை குறித்து தகவல் அளிக்க வேண்டும். பிரச்னைக்குரிய நபர்கள் எனில் எந்த கட்சியை சார்ந்தவர், என்ன மாதிரி பிரச்னை செய்வார், என விபரங்கள் சேகரிக்கப்படும். ஒரு வாரத்துக்குள் பட்டியல் தயாரித்து அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.