| 'மது பழக்கமே குழந்தைகளின் கொலைக்கு காரணம்' Dinamalar
'மது பழக்கமே குழந்தைகளின் கொலைக்கு காரணம்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
10:03

நாமக்கல்: குழந்தைகள் இருவரை, 300 அடி பள்ளத்தில் தூக்கி வீசி, தந்தையே கொலை செய்துள்ளார். மது பழக்கமே குழந்தைகளின் கொலைக்கு காரணம் என, போலீசார் தெரிவித்தனர்.


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை குண்டூர்நாடு அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி, 28. இவர் தனது மகன் கிரிதாஸ், 8, மகள் கவிதர்ஷிணி, 5, ஆகிய இருவரையும், கொல்லிமலை செம்மேடு அருகே சீக்குப்பாறை என்ற இடத்தில் இருந்து, 300 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்தார். வாழவந்திநாடு போலீசார், சிரஞ்சீவியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், சிரஞ்சீவிக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், கணவன், மனைவி பாக்கியம் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அரியூர் நாடு கவரப்பட்டியில் உள்ள, தனது பெற்றோர் வீட்டுக்கு பாக்கியம் சென்றுள்ளார். இந்த ஆத்திரத்தில், பள்ளியில் இருந்து கடந்த, 7ல் குழந்தைகள் இருவரையும், சிரஞ்சீவி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம், மலையில் இருந்து தூக்கி வீசி இரு குழந்தைகளையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளளதாக போலீசார் தெரிவித்தனர். தந்தையின் மது பழக்கத்திற்கு, குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கொல்லிமலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X