| குறுகிய சாலையால் விபத்து; வாகன ஓட்டிகள் அவதி Dinamalar
குறுகிய சாலையால் விபத்து; வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
10:03

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில் இருந்து, மோர்பாளையத்துக்கு தினமும் எராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், சங்ககிரி- ராசிபுரத்திற்கும் இவ்வழியாக செல்ல முடியும் என்பதால், எராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மிகவும் குறுகிய சாலையாக உள்ளதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கிச் செல்ல வழியின்றி, ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். சாலையோரத்திலுள்ள வயல்வெளிகளுக்குள் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X