| சமுதாய கூடம் சேதம்; சீரமைக்க கோரிக்கை Dinamalar
சமுதாய கூடம் சேதம்; சீரமைக்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
10:03

ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியம், குச்சிக்காடு பகுதியில், 150க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில், 25 ஆண்டுகளுக்கு முன் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இது சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்கறி கட்டடம் சேதமடைந்து வருகிறது. சுவர்கள் விழும் நிலையில் உள்ளன. இங்கு, நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தை சீரமைத்து தரவேண்டும் இல்லையெனில் புதியதாக கட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X