செங்கல்பட்டு:வேலுார்
மாவட்டம், ராசிப்பட்டியைச் சேர்ந்த தனஞ்செழியன் மகன்
தமிழ்செல்வன், 21. செங்கல்பட்டு அடுத்த தைலாவரத்தில் தங்கி,
கூடுவாஞ்சேரி தனியார்
நிறுவனத்தில்பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு, பொத்தேரி ரயில் நிலையத்திற்கு நடந்து சென்ற இவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், கத்தியால் அவரை வெட்டி, மொபைல் போனை பறித்து சென்றனர். தனியார் மருத்துவமனையில் உள்ளார்.இவரது புகாரை போலீசார் பதிந்து வழிப்பறி
வாலிபர்களை தேடுகின்றனர்.