| கையெழுத்து பெற அலைக்கழிப்பு: மாற்றுத்திறனாளிகள் வேதனை Dinamalar
கையெழுத்து பெற அலைக்கழிப்பு: மாற்றுத்திறனாளிகள் வேதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
02:12

திருப்பூர்:பஸ் பாஸ் மற்றும் ரயில் கட்டண சலுகைக்கு, டாக்டரின் கையொப்பம் பெறுவதற்காக, மாற்றுத் திறனாளிகள் அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், சிகிச்சைக்கு செல்ல, ஓராண்டுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அதாவது, தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.இது, கை, கால் பாதித்த, காது கேளாத மாற்றுத்திறனாளிகள், வீட்டின் அருகே உள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து, 100 கி.மீ., மிகாமல் தினமும் பயணிக்க உதவுகிறது. இதற்கு, மாற்றுத்திறனாளியின் தன்மையை குறிப்பிடுவதற்கு, அரசு டாக்டர்களின் கையொப்பம் அவசியம்.ஆனால், திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், அரசு டாக்டர்களின் கையொப்பம் வேண்டி, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பஸ், ரயில்களில் பயணம் செய்வதற்கு துணையாக ஒருவருடன் செல்வதற்கான, விண்ணப்ப படிவத்தில் டாக்டர்கள் கையொப்பம் இட மறுப்பு தெரிவிப்பதாகவும் புகார் எழுகிறது.


இதுதவிர, மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில், பயனாளிகளுக்கு, அடையாள அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரம், பஸ் பாஸ் மற்றும் பிற சலுகைகள் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டால், யாரை அணுகுவது என்பன உள்ளிட்ட விவரம் குறிப்பிடுவது கிடையாது. மொபைல் போன் எண் இல்லாததால், பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள், அரசு மருத்துவமனையில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.


மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், 'அடையாள அட்டை, சான்றிதழும் இருக்கும் போது, டாக்டர்கள் கையெழுத்து இட தயங்குகின்றனர்.எனவே, எங்களின் நிலை மற்றும் பெற்றோரின் நிலை கருதி, அனைத்து வசதிகளையும், கலெக்டர் அலுவலகத்தில் பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X