கூடுதல் 'டயாலிசிஸ்' கருவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
02:12

திருப்பூர்:தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதலாக ரத்தம் சுத்திகரிக்கும் டயாலிசிஸ் கருவிகள் பொருத்த நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், நீரிழிவு நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, நான்கு டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. அதில், மூன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.இதன் மூலம், கடந்த ஓராண்டில், 1,500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஒரு கருவியில் நாளொன்றுக்கு, 3 முறை ரத்த சுத்திகரிப்பு செய்யலாம். ஆனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதில், சிக்கல் ஏற்படுகிறது. அதாவது, நாளொன்றுக்கு, 3 கருவிகளையும், 9 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. கூடுதலாக, ரத்த சுத்திகரிப்பு கருவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பபட்டால், அதிகப்படியானோருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.


குறிப்பாக, தொடர் சிகிச்சைப் பெறுவோருக்கு, சிரை மற்றும் தமணியை இணைத்து அறுவைச் சிகிச்சை செய்யும் வசதியும் ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் கூறுகையில், 'தனியார் மருத்துவமனைகளில் ஒருமுறை ரத்தம் சுத்திகரிப்பு செய்ய, 2,500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.எனவே, கூடுதல் கருவிகள் பொருத்த வேண்டும். இலவசமாக கிடைக்கும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விளம்பர தகவல் பலகை வைக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X