நீதிமன்ற வளாக கடைகளில் 3 முறை தொடர் திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
02:15

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா வளாகத்தில், ஒரே வாரத்தில், ஐந்து கடைகளில், மூன்று முறை திருடு போனதால், கடைக்காரர்கள் பீதியில் உள்ளனர்.



காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், நீதிமன்றங்கள், அந்திரசன் மேல்நிலைப் பள்ளி, பொதுப்பணித் துறை அலுவலகம், கூட்டுறவு சங்கம் உட்பட, பல துறை அலுவலகங்கள்

இயங்குகின்றன.இந்த வளாகத்தில் உள்ள டீக்கடைகளில், மூன்று முறை, தொடர் திருட்டு

நடந்திருப்பது, கடைக்காரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த, 7ம் தேதி இரவு, ராமதாஸ் என்ற டீக்கடையின் கதவை உடைத்து, 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும், சிகரெட் பெட்டிகளையும், மர்ம நபர்கள் அள்ளி சென்றுள்ளனர்.மறுநாள், 8ம் தேதி இரவு, நாராயணன் டீ ஸ்டாலின் கதவை உடைத்து, 5,000 ரூபாயையும், சிகரெட், பிஸ்கட்

போன்றவற்றையும் திருடியுள்ளனர்.இரு நாட்கள் திருட்டு நடந்ததால், பதறிப்போன

கடைக்காரர்கள், சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் அளித்தனர். இரவில் ரோந்து வர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.



இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ராமதாஸ் டீ கடை உள்ளிட்ட மூன்று டீக்கடைகளில், மர்ம நபர்கள் புகுந்து, பணம் மற்றும் சிகரெட் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர்.ஒரே வாரத்தில், மூன்று முறை, ஐந்து கடைகளில் தொடர்ந்து திருட்டு நடந்துள்ளதால்,

கடைக்காரர்கள் பீதியில் உள்ளனர்.



'புகார் பெறும் போலீசார், அலட்சியமாக நடந்துக் கொள்கின்றனர்' என, கடைக்காரர்கள்

தெரிவித்துள்ளனர்.நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ள வளாகத்திலேயே, மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது, வேதனை அளிப்பதாக அவர்கள் புலம்பினர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X