| செய்தி சில வரிகளில்...காஞ்சிபுரம் Dinamalar
செய்தி சில வரிகளில்...காஞ்சிபுரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
02:22

எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்



காட்டரம்பாக்கம்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் கிராமத்தில், எல்லையம்மன் கோவில், வழித்துணை விநாயகர் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், புதிதாய் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, 12ம் தேதி துவங்கியது.தொடர்ந்து, நான்கு யாக கால பூஜை செய்யப்பட்டு, மூன்று கோவிலின் கலசங்களிலும், புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நேற்று செய்யப்பட்டது. கிராம மக்கள் பலர் பங்கேற்று, சுவாமியை

வழிபட்டனர்.



குழந்தைகள் தினம் கொண்டாட்டம்



ஆயக்கொளத்துார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த கிளாய் ஊராட்சி, ஆயக்கொளத்துார் கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.இந்த பள்ளி வளாகத்தில்,கிளாய், செங்காடு பகுதியில் இயங்கும் ஆறு அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இணைந்து, குழந்தைகள் தின

விழாவை,கொண்டாடின.இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேச்சு, மாறுவேடம், ஓவிய போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வட்டார கல்வி அலுவலர்

காஞ்சனா பரிசுகளை வழங்கினார்.



நெல் சாகுபடி பயிற்சி



களியனுார்: களியனுார் கிராமத்தில், நேற்று நடந்த பண்ணை பயிற்சிக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் அன்புசெல்வி தலைமை வகித்தார். நீர் வள, நில வள திட்டத்தில், நெல்

சாகுபடி செய்யும் தொழில் நுட்ப ஆலோசனைகளை, உதவிவேளாண் அலுவலர்கள் எடுத்து

உரைத்தனர். இதில், களியனுார் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த, 50 விவசாயிகள்

பங்கேற்றனர்.



முகாமில் 35 மனுக்களுக்கு தீர்வு




உத்திரமேரூர்: சாலவாக்கத்தில், 'அம்மா' திட்ட முகாம், நேற்று நடந்தது. தாசில்தார் சாந்தி, தனி தாசில்தார் ஞானவேல் தலைமை வகித்தனர்.முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா மாற்றுதல், திருமண மற்றும் முதியோர் உதவிதொகை உள்ளிட்ட, 58 கோரிக்கை மனுக்கள்,கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது.35 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



பள்ளிகளில் மரக்கன்றுகள் நடவு



உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், காவனுார் புதுச்சேரி நடுநிலைப் பள்ளி மற்றும்

பாரதிபுரம் தொடக்கப் பள்ளியில், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு சார்பில், குழந்தைகள் தின விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிர்மலா, சோமசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி வளாகத்தில், மாணவ - மாணவியர் மரக்கன்றுகள் நட்டனர்.பின், மரங்களை அவர்களே பராமரிப்பது என, உறுதிமொழி ஏற்றனர். பல்வேறு போட்டிகள்நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.



1.25 டன் பிளாஸ்டிக் பறிமுதல்



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பி.எஸ்.கே., தெரு மற்றும் பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளில்,

நகராட்சி நகர நல அலுவலர் முத்து தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் கவர்கள், கப், தட்டு போன்றவை விற்பனைக்கு இருந்தன.இதையடுத்து, 1.25 டன் பிளாஸ்டிக் பொருட்களை, சுகாதார துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பொருட்கள் வைத்து இருந்த கடைக்காரர்களுக்கு, 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X