| மணமை ஏரி கால்வாய் கரையை தனியார் அகற்றுவதாக குற்றச்சாட்டு Dinamalar
மணமை ஏரி கால்வாய் கரையை தனியார் அகற்றுவதாக குற்றச்சாட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
02:30

மாமல்லபுரம்:மணமை ஏரியின் கால்வாய் கரையை, தனியார் அகற்ற முயற்சிப்பதாக,

குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



மாமல்லபுரம் அடுத்த, மணமை பகுதியில், பொதுப்பணித் துறையின் பெரிய ஏரி உள்ளது.

இதன் வரத்துக் கால்வாய், கிழக்கு கடற்கரை சாலை வரை நீண்டு, ஆங்கிலேயர் காலத்தில், கால்வாய்க்கு கரை அமைக்கப்பட்டது.கால்வாயை ஒட்டிய, அரசு புறம்போக்கு நிலத்திற்கு, பல ஆண்டுகளுக்கு முன், தனியார் பெயரில் பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.



தற்போது, குடிமராமத்து பணியில், மணமை ஏரிக்கு மதகு அமைத்து, கரை பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சீரமைப்பு கால்வாய் கரை பகுதி, தனியார் ஒருவரின் பட்டா நிலத்தில் அமைந்து இருப்பதாகக் கூறி, அவர், ஜே.சி.பி., இயந்திரம் மூலம், கரை அகற்ற முயன்றார்.



இது குறித்து, பொதுமக்கள் புகாரையடுத்து அங்கு வந்த பொதுப்பணித் துறையினர், கரை

அகற்றப்படுவதைதடுத்தனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:அரசு புறம்போக்கு

நிலத்திற்கு, தனியாருக்கு வழங்கிய பட்டாவையே, ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம்.

இச்சூழலில், நில பட்டாதாரர், கால்வாய் கரையை, சில நுாறு மீட்டர், சில அடி அகலத்திற்கு அகற்ற முயற்சிக்கிறார். வருவாய் துறை ஆய்வு செய்து, கரை அகற்றுவதை நிரந்தரமாக தடுக்க
வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X