சோழவரம்:சோழவரம் அடுத்த, அழிஞ்சிவாக்கம் பகுதியில், சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் போலீசார், நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மடக்கினர். அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் மூட்டைகள் இருந்தன.இவற்றை கடத்தி வந்த, சென்னை
தண்டையார்பேட்டை அசோக்குமார்,
30, கவரைப்பேட்டை சுரேஷ், 28, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்; பல
லட்சம் ரூபாய் மதிப்பு புகையிலை பொருட்களை போலீசார்பறிமுதல் செய்தனர்.