மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே சோழமாதேவிமேடு நால்ரோடு பகுதியில், பழுதான தெருவிளக்குகள் 'தினமலர்' செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டன.மடத்துக்குளம் - கணியூர் ரோட்டில் சோழமாதேவி மேடு உள்ளது. இங்குள்ள நால்ரோடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளும், கடைகளும் உள்ளன. இங்குள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து, பல வாரங்களாக, இந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால், பல விபத்துக்கள் நடந்தன.வேடபட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட இப்பகுதியில் வசிக்கும் மக்கள், அடிக்கடி ரோட்டை கடந்து சென்று திரும்பும் தேவை அதிகமுள்ளது. தெருவிளக்கு இல்லாத காரணத்தால், இரவு நேரத்தில் மக்கள், மிகவும் அவதிப்பட்டனர். இந்த பிரச்னை குறித்து, கடந்த, 11ம் தேதி 'தினமலரில்' ''இருளில் மூழ்குகிறது சோழமாதேவிமேடு,'' என்ற தலைப்பில், செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தெருவிளக்குகள் பழுது நீக்கப்பட்டு, தற்போது ஒளிர்கின்றன.