| சுற்றுச்சூழலை பாதுகாக்க திருவள்ளூர் எம்.பி.,யிடம் மனு Dinamalar
சுற்றுச்சூழலை பாதுகாக்க திருவள்ளூர் எம்.பி.,யிடம் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
02:51

கும்மிடிப்பூண்டி:தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு காண

வலியுறுத்தியும், கும்மிடிப்பூண்டியின் பிரதான பிரச்னைகள் மீது நடவடிக்கைஎடுக்க

வலியுறுத்தியும், சுற்றுச்சூழல்பாதுகாப்பு அமைப்பு சார்பில், திருவள்ளூர் எம்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.



கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில், திருவள்ளூர் பார்லிமென்ட் உறுப்பினர் ஜெயகுமார் தலைமையில், மக்கள் தேவைகளை கேட்டறிந்து, அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் தீர்வு காணும் முகாம் நடைபெற்றது.கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும், 'பெப்ஸ்' என்ற
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், மக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் மீது மெட்ராஸ் ஐ.ஐ.டி., ஆய்வு நடத்தியது.


அந்த, ஆய்வறிக்கையுடன், தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மனு அளிக்கப்பட்டது.மேலும், கும்மிடிப்பூண்டியில், ஆறு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மாநகர் பஸ் பணிமனையை உடனடியாக நிறுவ வேண்டும். கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த போதிய இடம் ஒதுக்க வேண்டும்.மழைக்காலங்களில், கண்ணன்கோட்டை, மாநெல்லுார் ஏரிகளில் இருந்து மழைநீர் நிரம்பி வழிந்து, 22 கி.மீ., நீள

கால்வாயை கடந்து, எளாவூர் ஏழு கண் பாலம் அருகே, உபரி நீர் கடலில் கலக்கிறது.



விவசாயிகள் பயன் பெற அந்த இடைப்பட்ட கால்வாய் பகுதியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, ஐந்து தடுப்பு அணைகள் அமைத்திட வேண்டும்.கும்மிடிப்பூண்டி நகருக்குள், மீண்டும், தமிழ்நாடு அரசு விரைவு பஸ்களை இயக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் அளிக்க பட்டன.



மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தீர்வு காண்பதற்கான கால அவகாசத்தை, திருவள்ளூர் எம்.பி., கேட்டறிந்து, கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி

அளித்தார்.


 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X