திருத்தணி:விவசாயிகள்
மண்ணில்லாத தீவன பயிர் வளர்க்க தேவையான மின்மோட்டார்
மற்றும்
உபகரணங்களை, அரசு மானியத்துடன் கால்நடை துறையினர்,
30 விவசாயிகளுக்கு வழங்கினர்.
திருத்தணி
வருவாய் கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகம், நான்கு கிளை
நிலையங்கள்
உள்ளன. இங்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்கால்நடைகளை வளர்த்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில்,
கால்நடை துறையின் மூலம், மண்ணில்லாத தீவன பயிர் வளர்ப்பு மற்றும்
தீவனம் வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மின்மோட்டார்
அரசு
மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
படுகின்றன.இதன் மூலம் தீவனப்பயிர், ஏழு - எட்டு நாட்களுக்குள் வளர்ந்து விடும். இதற்கு, அரசு மானியம், 75 சதவீதம் வழங்குகிறது. விவசாயிகள் பங்களிப்பு, 25 சதவீதம் ஆகும்.அதாவது,
30 விவசாயிகளும், தலா, 5,625 ரூபாய்க்கான தொகை காசோலை அல்லதுபணமாக கட்ட
வேண்டும்.
இயந்திரம் வாங்கும், 30 விவசாயிகளுக்கும், விதைகள் கொள்முதல் செய்ய, 2,700 ரூபாய்
பயனாளிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.