| கழிப்பறை கட்டினால் தான் 100 நாள் திட்ட வேலையா? Dinamalar
கழிப்பறை கட்டினால் தான் 100 நாள் திட்ட வேலையா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
03:24

புள்ளலுார்:'தனி நபர் இல்ல கழிப்பறை கட்டினால் தான், 100 நாள் வேலை வழங்குவேன் என, அதிகாரிகள் கூறுவது சரியில்லை' என, சமூக தணிக்கை கூட்டத்தில், கிராமவாசிகள் புகார் தெரிவித்தனர்.



வாலாஜாபாத் ஒன்றியம், புள்ளலுார் ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது.தற்காலிக ஊராட்சி

தலைவர் தணிகாசலம் தலைமை வகித்தார். வட்டார சமூக தணிக்கை அலுவலர் சங்கர் பங்கேற்று, வரவு - செலவு கணக்கு வாசித்தார்.


தொடர்ந்து, நடந்தவிவாதம்:



கிராமவாசி: தனி நபர் இல்ல கழிப்பறை கட்டினால் தான், 100 நாள் வேலை வழங்குவேன் என, அதிகாரிகள் கூறுவது சரியில்லை.



ஊராட்சி செயலர்: இது அரசு திட்டம். அப்படியெல்லம் எதுவும் இல்லை.



கிராமவாசிகள்: 100 நாள் திட்டத்தை, 150 நாள் வேலை நாட்களாக உயர்த்தி தர வேண்டும்.



சமூக தணிக்கையாளர்: உங்களின் கோரிக்கையை மனுவாக கொடுங்கள், அதிகாரிகளுக்கு

பரிந்துரை செய்யப்படும்.



கிராமவாசி: 100 நாள் வேலைக்கு முழு கூலி கிடைப்பதில்லை.



சமூக தணிக்கையாளர்: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் வேலை நேரம், எட்டு மணி நேரம். இதில், ஒரு மணி நேரம் உணவு இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்.
அதிகாரிகள், குறித்து கொடுக்கும் நீளம், அகலத்திற்கு சரியாக வேலை செய்தால், முழு கூலி கிடைக்கும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X