உடுமலை;உடுமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி, உடுமலை எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், மாவட்ட அளவில் 90 பள்ளிகள் பங்கேற்றன. இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், 17 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் முத்துராம்குமார் முதலிடம், 19 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் அன்வர், மற்றும் ஹரிஹரசுதன் முதலிடம் பெற்றனர். மேலும், இரண்டு மாணவர்கள், இரண்டு மற்றும் மூன்றாமிடத்தை பெற்றனர். முதலிடம் பெற்ற மூன்று மாணவர்களும், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, உடற்கல்வி இயக்குனர் காசிராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் அழகேசன் மற்றும் வீரகேசவன் உள்ளிட்டோரை பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன், பாராட்டினர்.