கீழ்முதலம்பேடு ஏரியின் மதகு உடையும் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
03:39

கும்மிடிப்பூண்டி:கீழ்முதலம்பேடு ஏரியின் மதகு உடையும் அபாயத்தில் இருப்பதால், அதை உடனே சீர் செய்ய வேண்டும் என, கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.



கவரைப்பேட்டை அருகே, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது கீழ்முதலம்பேடு ஏரி. பரந்து விரிந்து காணப்படும், 300 ஏக்கர் பரப்பு கொண்ட அந்த ஏரியை நம்பி, 605 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அந்த ஏரியில் மொத்தம் ஐந்து மதகுகள் உள்ளன.ஒரு மாதத்திற்கு முன், இந்த ஏரியில், 47 லட்சம் ரூபாய் மதிப்பில், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம்,

செயல்படுத்தப்பட்டது.



அப்போது, மதகு பழுது பார்த்தல், கரையை பலப்படுத்துதல், வரவு கால்வாய் துார்வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குடிமராமத்து மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏரியின் வடக்கு பகுதியில், கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலை ஓரம் உள்ள மதகு, விரிசல் கண்டு எந்த நேரத்திலும் உடையும் அபாயத்தில் உள்ளது.வர இருக்கும் மழைக்காலத்தில், ஏரி நிரம்பும் பட்சத்தில் கண்டிப்பாக மதகு உடைய வாய்ப்பு உள்ளது என, கிராம மக்கள் அச்சத்துடன்

தெரிவிக்கின்றனர்.



சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மூழ்குவதுடன், மழைநீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உடனடியாக அந்த மதகினை சீர் செய்ய வேண்டும் என, கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.



இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை நீராதாரம்

பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'முதலமைச்சரின்குடிமராமத்து திட்டத்தின் கீழ்,

கீழ்முதலம்பேடு ஏரியில் உள்ள ஐந்து மதகுகளில், ஒரு மதகுமட்டும் சீர் செய்யப்பட்டது.

'விரிசல் கண்ட மதகை, ஆய்வு செய்து, உரிய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்' என,

தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X