| அரசு மருத்துவமனையில் செவிலியர்... பற்றாக்குறை! :செங்கல்பட்டில் நோயாளிகள் பரிதவிப்பு Dinamalar
அரசு மருத்துவமனையில் செவிலியர்... பற்றாக்குறை! :செங்கல்பட்டில் நோயாளிகள் பரிதவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
03:44

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், செவிலியர்கள் பற்றாக்குறையால், முறையான சிகிச்சை பெறமுடியாமல், நோயாளிகள் கடுமையாக

பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



செங்கல்பட்டில், 1965ம் ஆண்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை துவங்கப்பட்டது.

துவக்கத்தில், 650 படுக்கைகளுடன், 132 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். காஞ்சிபுரம்

மட்டுமின்றி திருவண்ணாமலை, விழுப்புரம், வேலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் வருகின்றனர்.



பாதிப்பு





தற்போது, 47 உள்நோயாளிகள் வார்டு, 26 புறநோயாளிகள் வார்டு, எட்டு அறுவை சிகிச்சை

அரங்கங்கள் என, 81 வார்டு கள் செயல்படுகின்றன.தவிர, முதல்வர் காப்பீடு திட்ட தனிப்பிரிவும் துவங்கப்பட்டு உள்ளது. இந்த வார்டுகள்அனைத்தும், அடுக்குமாடி கட்டடத்தில் உள்ளன.

தற்போது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும், 4,000க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 1,450 பேர் உள்நோயாளிகளாவும் சிகிச்சை பெறுகின்றனர்.



இதனால், நோயாளிகளை கவனித்து மருத்துவம் அளிக்க முடியாமல், செவிலியர்கள்

சிரமப்படுகின்றனர். கூடுதல் பணியால், தங்களின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுவதாக, அவர்கள் கூறுகின்றனர்.கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரி, பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



இது சம்பந்தமாக, சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதார செயலர் ஆகியோர், மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டும், செவிலியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது.புதிதாக அமைக்கப்பட்ட

விழுப்புரம், திருவண்ணாமலை மருத்துவமனைகளில், குறைவான எண்ணிக்கையில்

நோயாளிகள் வரும் நிலையில், 250க்கும் மேற்பட்ட செவிலியர்கள், அங்கு பணிபுரிகின்றனர்.


சிரமம்





சராசரியாக தினமும், 5,000 நோயாளிகள் வரும் செங்கல்பட்டு மருத்துவமனையில்,

132 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிவதால், கடும்சிரமம் ஏற்படுகிறது.கூடுதல் செவிலியர்களை நியமிக்க, அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என, வலியுறுத்திவருகின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X