| காஞ்சியில் வேலை அறிவிப்பு 'கட்டிங்' கட்சியினர் உற்சாகம் Dinamalar
காஞ்சியில் வேலை அறிவிப்பு 'கட்டிங்' கட்சியினர் உற்சாகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
03:45

ஊரக வளர்ச்சி துறையில், பல பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளதால், 'கட்டிங்' வாங்கும் அரசியல் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி செயலர், அலுவலக உதவியாளர், ஓட்டுனர் என, பல காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, ஊரக வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. இதற்கு, பலதரப்பினரும் விண்ணப்பித்து வருகின்றனர்.இதில், ஒரு சில விண்ணப்பதாரர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகளை, 'காக்கா பிடிக்க' துவங்கியுள்ளனர்.



அவர்களுக்கு இணையாக, தி.மு.க.,வினரிடமும், வேலைக்கு அடித்தளம் போடப்படுகிறது.இந்த இரு கட்சியினர் தேர்வு செய்து, பரிசீலிக்கும் நபர்களை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம்

நியமிக்குமா என, விண்ணப்பதாரர்கள் இடையே புலம்பல் வந்துள்ளது.இருப்பினும்,

மதிப்பெண்கள் அடிப்படையில்தான் தேர்வு நடைபெறும் என, ஊரக வளர்ச்சி துறை

தெரிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X