ஆனைமலை:ஆனைமலை முக்கோணம் அருகே, தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.ஆனைமலை முக்கோணம் பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக, ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு, சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், தாத்துாரை சேர்ந்த பிரகாஷ் என்கிற தமீம், 29. என்பதும், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த லாட்டரிகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து, 140 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.