பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் நான்கு வழி மேம்பால பணியை, திட்டமிட்டு மேற்கொண்டால், பொதுமக்களுக்கு பாதிப்பு குறையும்.பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் குறுக்கிடும் ரயில் பாதையை கடக்க, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது.கட்டுமான பணியின் துவக்கமாக, ரயில்வே கேட்டின் மேற்கு பகுதியில், கான்கிரீட் துாண்கள் அமைக்க அஸ்திவார குழி தோண்டப்பட்டது.அங்கு கட்டுமான பணி துவங்கும் முன்பே, ரயில்வே கேட்டின் கிழக்கு பகுதியிலும் பள்ளம் தோண்டப்படுகிறது. முதலில் ஒரு பகுதியில் பணியை முடித்து விட்டு, மறு பகுதியில் துவங்குவது போக்குவரத்து பாதிப்பை குறைக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.கோவை ரோட்டில் மேம்பாலங்கள் கட்டும் போது, ஒரு பகுதியில் பணியை முழுமையாக முடித்து விட்டு, மறு பகுதியில் துவங்கினர். இதனால், போக்குவரத்து ஒரு பகுதியில் வழக்கம் போல இயங்கியது.அதே முறையை கையாண்டு, ரயில்வே கேட்டுக்கு மேற்கு பகுதியில் கட்டுமானத்தை நிறைவு செய்த பிறகு, கிழக்கு பகுதியில், பணியை துவங்குவது நல்லது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து, திட்டமிட்டு பணியை மேற்கொள்வது பாதிப்புகளை குறைக்கும்.