மரக்கூண்டில் காட்டு யானை அடைப்பு: மருத்துவ குழுவினர் தீவிர பரிசோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
03:52

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் வரகளியாறில், மரக்கூண்டில் அடைக்கப்பட்ட காட்டு யானைக்கு, மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.பொள்ளாச்சி அடுத்த அர்த்தநாரிபாளையம், நவமலை பகுதிகளில் கடந்த, ஏழு மாதங்களில், மூவரை தாக்கி கொன்றது, ஒற்றை காட்டு ஆண் யானை.விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் அந்த யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.


அர்த்தநாரிபாளையத்தில் கடந்த, 10ம் யானையை பிடிக்க வனத்துறையினர், மயக்க ஊசி, கும்கி யானைகளுடன் காத்திருந்தனர். கடந்த, 13ம் தேதி இரவு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, நேற்று முன்தினம் காலை, கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானை பிடிக்கப்பட்டது.அதன்பின், லாரியில் ஏற்றப்பட்டு, டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் மரக்கூண்டில் (கரோல்) அடைக்கப்பட்டது. மரக்கூண்டில் யானை எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பதாக, வனத்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.டாப்சிலிப் வனச்சரக அலுவலர் சக்திவேல் கூறியதாவது:மரக்கூண்டில் அடைக்கப்பட்ட, 18 வயதான காட்டு யானை மிகவும் அமைதியாக, ஆரோக்கியமாக உள்ளது. மரக்கூண்டை உடைப்பது, பிளிறுவது என எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருக்கிறது.இந்த யானைக்காக, அனுபவமிக்க இரண்டு பாகன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இலைகள், பழங்கள் உள்ளிட்டவை யானைக்கு உணவாக வழங்கப்படுகிறது.


மருத்துவ குழுவினர் யானையின் உடல் ஆரோக்கியம் குறித்து தெரிந்துகொள்ள, பரிசோதனை செய்து வருகின்றனர். ஆய்வக பரிசோதனைக்காக சாணம் எடுத்து உள்ளனர். 10 - 20 நாட்களுக்குப்பின், முகாம் யானைகளுக்கு வழங்கப்படும் உணவு வழங்கப்படும்.முகாம் யானையாக மாற்றுவதற்கான பயிற்சி வழங்கப்படும். காட்டு யானை அடைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் தான், சமீபத்தில் வனத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட சின்னத்தம்பி யானை உள்ளது. அதுவும், ஆரோக்கியமாக உள்ளது.இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X