கோவை மாவட்டம் சாமளாபுரம் கிராமத்தில் எனக்கு, 7.06 சென்ட் இடம் அமைந்துள்ளது. அதில், கட்டியுள்ள, 590 சதுர அடி சிமென்ட் சீட் வீடு மற்றும் 'அன் அப்ரூவ்டு' கட்டடத்தை விற்க எண்ணியுள்ளேன். என்ன விலை கிடைக்கும்.- பி. சந்திரன், கோவை.தாங்கள் கூறியுள்ள இடம் தமிழ்நாடு அரசு புதிய ஒழுங்குபடுத்தும் விதியின்படி, இடத்தை அப்ரூவல் செய்து, வாடகை கட்டடங்களை கட்டி பல போர்ஷன்களாக விட்டு வருமானம் வர வைத்தால் மட்டுமே அதிக மதிப்பு பெற இயலும். அதன்படி, 18 லட்சம் வரை விலை எதிர்பார்க்கலாம்.திருப்பூர் மாவட்டம் பள்ளபாளையம் கிராமத்தில் உள்ள, 5 சென்ட் டி.டி.சி.பி., சைட்டில், 4,000 சதுர அடிகள் கொண்ட நான்கு போர்ஷன்கள் உள்ள வீடு விற்பனைக்கு உள்ளது. என்ன விலை கொடுக்கலாம்.- கே. அருண், திருப்பூர்.தாங்கள் கூறியுள்ள இடம் தற்போது வளர்ந்துவரும் சோமனுாரில் ஒரு பகுதியில் உள்ளது. மொத்த வாடகையாக, 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குமானால் வீட்டின் மதிப்பு, 80 லட்சம் ரூபாய் கிடைக்கும்.நீலகிரி மாவட்டம் குன்னுார் தாலுகா, மேலுார் கிராமத்தில் 7 சென்ட் இடம் மற்றும் அதில் கட்டியுள்ள, 3,000 சதுர அடிகள் கீழும் மேலுமாக நான்கு போர்ஷன்கள் கொண்ட வீடு விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்.- சி.விஷ்ணு, நீலகிரி.தாங்கள் குறிப்பிட்ட இடம் குன்னுாரில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ளது. குடியிருப்பு பகுதியாகவும் தெரிவதால், இடத்தின் மதிப்பு குறைந்த பட்சம், 70 லட்சம் ரூபாய் பெறும்.