சிங்கம்புணரி : சிங்கம்புணரியில்உள்ளாட்சி தேர்தலுக்காக அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி மக்கள் மன்றத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 10 உறுப்பினர்களுக்கும், சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி 18-வார்டுகளில் போட்டியிட விரும்புவர்களுக்கு மனு வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் கூறியதாவது:உள்ளாட்சி அமைப்பில் உள்ள 1 ,2 , மாவட்ட கவுன்சில் உறுப்பினர் படிவம் மற்றும் பேரூராட்சி தலைவர் உறுப்பினர் படிவம் சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 1, 8, 10, 11, 13, 14, 15, 17 ஆகிய வார்டுகள் பொது பிரிவாகவும் 2 , 3, 5, 6, 7, 9, 16, 18 பொதுப்பிரிவில் பெண்களுக்கும் 12 வது-வார்டு எஸ்.சி பொது பிரிவிற்கும் 4-வது வார்டு எஸ்.சி பெண்ணிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 10 பேருக்கு 5, 6, 8, 9, 10 வார்டுகள் பொது பிரிவாகவும் 1, 2, 3,7 ஆகிய வார்டுகள் பெண் பொது பிரிவாகவும், 4வதுவார்டு பெண் எஸ்.சி., பிரிவிலும் உள்ளது என கூறினார்.