காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள ஆலத்துப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 70. இவர், சொக்கலிங்கம்புதுார் செட்டி ஊரணி அருகேஇருசக்கர வாகனத்தில் வந்த போது, எதிரே வந்த வேன்மோதியதில் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக செல்லும் வழியில், வெள்ளைச்சாமி உயிரிழந்தார். வெள்ளைச்சாமி மகள் தனலெட்சுமி புகாரின் பேரில்,செட்டிநாடு போலீசார் கழனிவாசலை சேர்ந்த முத்து 52, என்பவர் மீதுவழக்குபதிவு செய்தனர்.