மல்லாக்கோட்டைக்கு பெரியாறு தண்ணீர் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
மல்லாக்கோட்டைக்கு பெரியாறு தண்ணீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
23:43

சிவகங்கை : சிவகங்கை அருகே மல்லாக்கோட்டை கிராமத்திற்கு பெரியாறு தண்ணீர் திறக்க கலெக்டர் ஜெயகாந்தனிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.




இம்மாவட்ட விவசாயிகள் பெரியாறு தண்ணீர் கேட்டு சோழபுரத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 48 வது கால்வாய், கட்டாணிபட்டி 1 மற்றும் 2 கால்வாய்களில் 10 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கட்டாணிபட்டி 1 கால்வாய் பாசன பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்காததால் அப்பகுதி விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். நேற்று அவர்கள் சிவகங்கை கலெக்டரிடம் தங்கள் பகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.




காளைலிங்கம் மல்லாகோட்டை: எங்கள் கிராமத்தில் சேந்தணி, சிந்தாமணி, அழகினி, முருகனி, செங்குளம், புதுக்கண்மாய், சண்டாலி கண்மாய், மலையப்புலி, மூக்கலன் பிச்சன், சரிவர்ணம் ஏந்தல், நல்லான்மலை என பல கண்மாய்கள் வறண்டு நிலத்தடி நீரும் இல்லாமல் உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு கூட குடிநீர் கிடைக்கவில்லை. 4 வது நீர்ப்பாசன மடையை தாண்டி 10 நாட்கள் தண்ணீர் சென்ற நிலையில் எங்கள் கிராம பகுதிக்கு தண்ணீர் திறக்க மேலுாரில் உள்ள பாசன அதிகாரிகள் மறுக்கிறார்கள். தற்போது அணை 126 அடியாக உள்ளது. எனவே எங்கள் கிராமத்திற்கும் தண்ணீர் திறக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X