கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே ஆபீசர்ஸ் கிளப் கட்டட பால்கனி இடிந்து விழுந்து பல நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாமல்உள்ளது.கடலுார் பழைய கலெக்டர் அலுவலகச் சாலையில் உள்ளது ஆபீசர்ஸ் கிளப். இந்த கட்டடத்தின் பால்கனி பகுதி சேதமடைந்து, கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது.அங்கு யாரும் இல்லாததால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த கட்டடத்தின் உள்ள அறைகளில் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் தங்கியுள்ளனர்.பால்கனி இடிந்து விழுந்து பல நாட்களாகியும் இதுவரை அப்புறப்படுத்தப் படாமல் அப்படியே கிடக்கிறது.இதனை தினசரி பார்த்து செல்லும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.