சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினர் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி, சிதம்பரம் தெற்கு வீதி ஏ.ஆர்.மகாலில் நடந்தது.கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., பாண்டியன் விருப்ப மனுக்கள் பெறும் பணியை துவக்கி வைத்தார். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். கொள்கை பரப்பு செயலாளர் இளங்கோவன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் சீனுவாசராஜா, எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகள், பரங்கிப்பேட்டை, குமராட்சி, கீரப்பாளையம், புவனகிரி, கம்மாபுரம், பண்ருட்டி, அண்ணாகிராமம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், அண்ணாமலை நகர், புவனகிரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, கெங்கைகொண்டான், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிக்கு 1,500க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட நிர்வாகிகள் குமார், வக்கீல் முருகுமணி, சிதம்பரம் நிர்வாகிகள் சண்முகம், சுந்தர், பன்னீர்செல்வம், சுரேஷ்பாபு, முருகன், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், ஜெயபாலன், சிவப்பிரகாசம், மருதை முனுசாமி, விஜயன், மாரிமுத்து, ஆறுமுகம், செல்வகுமார், மணிகண்டன், விநாயகம், ஜெயசீலன் பங்கேற்றனர்.