பண்ருட்டி: பண்ருட்டி நகர த.மா.கா. தலைவர் கனகராஜ்- அருணா திருமண விழாவில், த.மா.கா. மாநில தலைவர் வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த நகர த.மா.கா. தலைவர் கனகராஜிக்கும், அவியனுார் ஆறுமுகம் மகள் அருணாவிற்கும் பண்ருட்டியில் திருமணம் நடந்தது. முன்னாள் எம்.பி., வெங்கடேசன் தலைமை தாங்கினார். முன்னாள் நகரமன்ற தலைவர் பஞ்சவர்ணம், வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் ஞானசந்திரன், நெடுஞ்செழியன், முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.த.மா.கா., தலைவர் வாசன் மணமக்களை வாழ்த்தினார். த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன், மாநில பொது செயலாளர் பாட்சா, ஜெயசந்திரன், வேல்முருகன், எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஜோதி எண்டர்பிரைசஸ் ராமச்சந்திரன், வக்கீல் பார்த்தசாரதி, த.மா.கா. முன்னாள் தலைவர் தணிகாசலம், முன்னாள் கவுன்சிலர் பன்னீர்செல்வம், தொழிலதிபர்கள் காமராஜ், வைரக்கண்ணு, மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.