மூதாட்டியிடம் பணம் 'அபேஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
00:30

திட்டக்குடி: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி மர்ம நபர்கள் நுாதன முறையில் பணம் பறித்து சென்றுள்ளனர்.திட்டக்குடி அடுத்த ராமநத்தம் பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மனைவி கிருஷ்ணம்மாள்,65. கணவர் இறந்து விட்டார். மகன் வெளிநாட்டிலும், மகள் பெரம்பலுாரிலும் வசிக்கின்றனர்.கிருஷ்ணம்மாள் வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம், இரண்டு டிப்டாப் ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். உங்கள் கணவர் இறப்பிற்காக 20ஆயிரம் ரூபாய் பணம் வந்துள்ளது. அதை பெறுவதற்கு 4 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்றனர்.கிருஷ்ணம்மாள் பணம் தர மறுத்த நிலையில், அவரை மூளை சலவை செய்த அந்த டிப்டாப் ஆசாமிகள், 3 ஆயிரம் ரூபாயை பெற்றனர். பின்னர் அவரிடம் வங்கி ஒன்றின் பணம் எடுக்கும் படிவத்தை கொடுத்து, பணத்தை எடுத்துக் கொள்ள கூறி சென்று விட்டனர்.அந்த படிவத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்ற போது, தான் ஏமாற்றப்பட்டதை கிருஷ்ணம்மாள் அறிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி,75; என்பவரிடமிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் பணம் திருடிச்சென்றனர். வீட்டில் தனியாக வசிக்கும் முதியோரை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X