உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி மகன் குமார், 28; இவர், திருப்பெயர் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி பைக்கில் சென்றார். நேற்று மாலை 6:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த புல்லுார் சாலையில் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார்.அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் இறந்தார்.இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.