| விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை Dinamalar
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2019
01:00

விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்திற்கு விஜயம் செய்துள்ள, காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.விழுப்புரம் சங்கரமடத்திற்கு, கடந்த 13ம் தேதி, காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்தார். இதையடுத்து, 14ம் தேதி முதல் நேற்று வரை, தினமும் காலை கோ பூஜைகளுடன் வழிபாடுகள் துவங்கியது. பின்னர், சந்திரமவுலீஸ்வர் பூஜை நடந்தது.மூன்று தினங்களும், காலை, மதியம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மூன்று கால பூஜைகள் நடந்தது. மாலை 3.00 மணிக்கு மேல், விழுப்புரம் தாலுகா அளவில், இந்து ஆலய மேம்பாடு மற்றும் அர்ச்சகர்கள் நல அமைப்பு சார்பில், கிராம பூசாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.அப்போது அவர் கூறுகையில், 'ஊர் நல்லாயிருக்க வேண்டுமானால், கோவில் இருக்க வேண்டும். அதில் பூஜைகள் நடைபெற வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில், இந்து ஆலய மேம்பாடு மற்றும் அர்ச்சகர்கள் நல அமைப்பு மாவட்ட தலைவர் நாகராஜன், கோட்ட பொறுப்பாளர் தனசேகரன், தாலுகா பொறுப்பாளர் தீனதயாளன் உட்பட பெண்கள் மற்றும் கிராம பூசாரிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X