துவங்கியது மண்டல காலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
01:03

சபரிமலை:மண்டல கால பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, கோவிலை வலம் வந்து நடை திறந்து தீபம் ஏற்றினார்.


மேல்சாந்தி, 18ம் படி வழியாக சென்று, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின், சன்னிதானம் திரும்பினார். அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம் போர்டு தலைவர் வாசு, உறுப்பினர் ரவி, விஜயகுமார் உள்ளிட்டோர், இதில் பங்கேற்றனர். அதிகாலை, 3:00 மணிக்கு சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியவுடன், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது. அய்யப்பனுக்கு நெய் அபிேஷகத்தை தந்திரி துவக்கி வைத்தார்.


இனிவரும், 41 நாட்களிலும் அதிகாலை, 3:30 மணிக்கு நெய் அபிேஷகம் துவங்கி, பகல், 12:00 மணி வரை நடக்கும். கோவிலுக்கு, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வருவது தொடர்பான தீர்ப்பு, இறுதி ஆகாத நிலையில், 'பெண்கள் சபரிமலை வந்தால், அரசு பாதுகாப்பு கொடுக்காது. விளம்பரம் தேடுவதற்காக வரும் ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு கிடையாது' என, அமைச்சர் சுரேந்திரன் அறிவித்தார்.


இந்நிலையில், ஆந்திரா விஜயவாடாவை சேர்ந்த, 15 பேர் குழுவில், மூன்று பெண்கள் பம்பை வரை வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். ஆசாரம் தெரியாமல் வந்ததாக அந்த பெண்கள் தெரிவித்தனர்.'பக்தர்களின் சிறிய வாகனங்கள், பம்பையில் அவர்களை இறக்கி விட்டு, நிலக்கல்லில் நிறுத்த வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனால், சில மாதங்களாக சிறிய வாகனங்கள் பம்பை வரை வந்தன. ஆனால் மண்டல, மகரவிளக்கு காலங்களில் எல்லா வாகனங்களும் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நிலக்கல்லில் இருந்து, அரசு பஸ்சில் பம்பை சென்று திரும்ப வேண்டும். இது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X