திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வரத்து குறைவு காரணமாக கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.900க்கு விற்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, வெள்ளோடு, தருமத்துப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். கார்த்திகை மாத சபரிமலை சீசன் இன்று முதல் துவங்குகிறது. இதனால் பூக்கள் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக வரத்து குறைவால் 2 நாட்களுக்குமுன் கனகாம்பரம் பூ ஒரு கிலோ ரூ.600க்கு விற்றது தற்போது ரூ.300 விலை உயர்ந்து ஒருகிலோ ரூ.900க்கு விற்கிறது. சீசன் நேரத்தில் ஒருநாளைக்கு கனகாம்பரம் 500கிலோ வந்தது, தற்போது 40 கிலோ முதல் 50 கிலோ மட்டுமே வருவதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.