நெட்டப்பாக்கம்: இலவச மனைப்பட்டா கேட்டு, குருவிக்கார மக்கள் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியிடம் மனு அளித்தனர்.மகடிப்பட்டு சந்தைதோப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குருவிக்கார மக்கள் குடிசை வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் வீடுகளை, சில தினங்களுக்கு முன் வில்லியனுார் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் ஜே.சி.பி., மூலம் அகற்றினர்.வீடுகளை இழந்த குருவிக்கார மக்கள் அப்பகுதியில் உள்ள மரத்தடியிலும், அரசு பள்ளி கட்டட வளாகத்தில் தங்கி உள்ளனர். தற்போது மழை பெய்து வருவதால், வீடுகளின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ள குருவிக்கார மக்கள் நேற்று பழங்குடி விடுதலை இயக்க புதுச்சேரி மாநில செயலர் ஏகாம்பரம் தலைமையில் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியை நேரில் சந்தித்து, இலவச மனைப்பட்டா கோரி மனு கொடுத்தனர்.அவர்களிடம் அமைச்சர், தற்காலிகமாக தங்குவதற்கும், நிரந்தரமாக வீடு கட்டிக்கொள்ள அடிப்படை வசதியுடன் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.