| எஸ்.ஆர்.கே பள்ளியில் மதநல்லிணக்க ஊர்வலம் Dinamalar
எஸ்.ஆர்.கே பள்ளியில் மதநல்லிணக்க ஊர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2019
01:58

வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஆர்.கே மேல்நிலைப் பள்ளி சார்பில் நடந்த மதநல்லிணக்க ஊர்வலத்தை முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.கரிக்கலாம்பாக்கம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.கே மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவர்களின் மதநல்லிணக்க ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி மகேந்திரன் வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி மற்றும் நல அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கொடியசைத்து மாணவர்களின் மதநல்லிணக்க ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.மாணவர்கள் ஊர்வலத்தில் மூவர்ண பலுான்கள், பட்டங்கள் மற்றும் தேசிய கொடிகள் ஏந்தியபடி பொதுமக்களுக்கு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் முழக்கமிட்டப் படி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை அடைந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X