புழல்:புழல் அடுத்த புத்தகரம், வெங்கடசாய் நகரில் வசித்தவர் விக்னேஷ், 29; பூந்தமல்லி அருகே, ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும், மதுரவாயலைச் சேர்ந்த சன்மதி என்பவருக்கும், மூன்று மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.நேற்று காலை, மனைவியை, அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மீண்டும், 11:00 மணி அளவில், அவர் மட்டும் வீடு திரும்பினார்.பகல், 2:30 மணி அளவில், அவரது தாய் வளர்மதி, மகனை சாப்பிட அழைக்கச் சென்றார். அப்போது, விக்னேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. புழல் போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.