பரவும் 'டெங்கு'! 6 பேருக்கு தீவிர சிகிச்சை:மருத்துவ முகாம் எப்போது?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

17 நவ
2019
02:17
பதிவு செய்த நாள்
நவ 17,2019 02:16

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஆறு பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொடர் மருத்துவ முகாம் நடத்த வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது.


இதைத் தொடர்ந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும், இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.


திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், தினமும், 300 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில், சிவக்குமார், 13; ஜீவிகா, 4; ஷாலினி, 21; சோபனா, 14; கோகுல், 14 ஆகியோர் ஆங்காங்கே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் கூறியதாவது:காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


அங்கு மட்டுமே கொசு மருந்து அடித்தல், மருந்து தெளித்தல், குடிநீரில் குளோரினேற்றம் செய்தல் போன்ற பணிகளை சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். பிற பகுதிகளில் நோய் தடுப்பு மேற்கொள்ளப்படாததால் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது.எனவே, அனைத்து பகுதிகளிலும், பொது மருத்துவ முகாம் நடத்தி, காய்ச்சல் நோயாளிகளைக் கண்டறிந்து, மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும்.


அதேபோல், ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள, அனைத்து தரப்பு மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X