திருவள்ளூர்: காக்களூரைச் சேர்ந்தவர், சரவணன் மகன் யுவராஜ், 21. இவர், யமஹா இருசக்கர வாகனத்தை, நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன், நிறுத்தியிருந்தார்.நள்ளிரவு, அந்த இருசக்கர வாகனம், திடீரென தீ பற்றி எரிந்தது. இது குறித்து, யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
இருவர் கைது
வெள்ளவேடு: வெள்ளவேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடப்பாக்கம், ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், அதே பகுதியைச் சேர்ந்த, கருணாகரன்,35, சரவணன், 20 இருவரும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து, விசாரிக்கின்றனர்
.இளம்பெண் மாயம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, விடையூர், காரணி கிராமத்தைச் சேர்ந்தவர், ராமதாஸ் மகள் ஜெயபிரியா, 21. பி.காம் முடித்த இவர், கடந்த, 12ம் தேதி, வீட்டை விட்டு வெளியில் சென்றவர், பின் வீடு திரும்பவில்லை.இது குறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருவள்ளூர் தாலுகா போலீசார், ஜெயபிரியாவை தேடி வருகின்றனர்.வேன் பறிமுதல்திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாண்டூர் அருகில், டாடா 207 வேனில் சிலர் மணல் கடத்தி வந்ததை, போலீசார் தடுத்து நிறுத்தி, பறிமுதல் செய்தனர்.மேலும், அதன் உரிமையாளர் அப்பு என்ற பிரதீப் என்பவரை தேடி வருகின்னறர்.