குளிர்காலத்துக்கு ஏற்றது காலிபிளவர் சாகுபடி : லாபம் கிடைக்க வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
03:13

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், மாற்றுப்பயிராக காலி பிளவர் சாகுபடி செய்தால், லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.அமராவதி ஆறு மடத்துக்குளத்தின் வாழ்வாதாரமாக உள்ளது. அணையில் தேக்கப்படும் நீரை நம்பி, 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் உள்ளன. ஆனால், இந்த பரப்பளவு நிலத்திற்கு, அணையில் தேக்கும் நீர் போதாது. இதனால், ஆண்டுதோறும் பல இடங்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது.தற்போது சம்பா சாகுபடிக்கு, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதியில் பாசன நீர் திறக்கப்பட்டு, 2,500 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடந்துள்ளது. இது தவிர, 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் மக்காசோளம் பயிரிடப்பட்டுள்ளது.பாசனநீர் பற்றாக்குறை உள்ள, கிணற்று பாசனமுள்ள விளைநிலத்தில், குறைவான பாசனநீர் பயன்படுத்தும் பயிர் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர். இதில், குறிப்பிடத்தக்க பயிராக காலிபிளவர் சாகுபடி செய்தால் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'அதிகப்பட்சம், 80 நாட்களில், அறுவடை தொடங்கலாம். செப்டம்பர், அக்டோபர் மாதம் முதல் ஜனவரி பிற்பாதி வரை, சாகுபடிக்கு உரிய பருவமாகும். குளிரும், பனியும், காலிபிளவர் வளர்ச்சிக்கு சிறந்தது. ஏக்கருக்கு, எட்டு முதல் 10 ஆயிரம் பூக்கள் வரை பூக்கும். குறைந்த பாசனநீரை பயன்படுத்தி லாபம் பெறலாம்' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X