போக்குவரத்து நிறைந்த ரோட்டில் மதுக்கடை: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
போக்குவரத்து நிறைந்த ரோட்டில் மதுக்கடை: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2019
03:13

உடுமலை:'அரசு அலுவலகங்கள், போக்குவரத்து நிறைந்த ரோட்டில், செயல்படும் 'டாஸ்மாக்' மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும்,' என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.உடுமலை பசுபதி வீதியில், நகர கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி உட்பட அரசு அலுவலகங்களும், வணிக கடைகளும் அதிகளவு உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த தளி ரோட்டிலிருந்து பிரியும் இந்த வீதியில், காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் மிகுந்து இருக்கும். இந்நிலையில், நகர கூட்டுறவு வங்கி எதிரில், 'டாஸ்மாக்' மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக்கடையால், ஏற்கனவே, நெரிசலில் சிக்கி தவிக்கும் வீதியில், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாகியுள்ளது.குறிப்பாக, கடைக்கு வரும் 'குடிமகன்'கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதுடன், இரவு நேரங்களில், அரசு அலுவலகங்கள் முன் தஞ்சமடைகின்றனர். இதனால், பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர் அவ்வழியாக செல்ல முடிவதில்லை.பாதுகாப்பு கருதி, பசுபதி வீதியை தவிர்த்து, அனைத்து வாகனங்களும் தளி ரோட்டில் செல்ல முயற்சிக்கும் போது, அப்பகுதியில், விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த மதுக்கடைக்கு 'பார்' வசதியும் இல்லாததால், 'குடி'மகன்கள் சரக்குடன் ரோட்டிலேயே அமர்ந்து ரகளையில் ஈடுபடுகின்றனர்.இது குறித்து தன்னார்வ அமைப்புகள் சார்பில், பல முறை மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பல்வேறு குற்றச்சம்பவங்கள் அப்பகுதியில் நடக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X