சாரல் மழைக்கே குளமான சங்ககிரி சாலை: பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தத்தளிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
08:25

வீரபாண்டி: சேலத்தில் பெய்த சாரல் மழைக்கே, சங்ககிரி பிரதான சாலை குளமானதால், வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி சென்றனர்.


சேலத்தில், நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், கனமழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதியம், 2:00 மணிக்கு, சாரல் மழை மட்டும் பெய்தது. இதனால், நெடுஞ்சாலைகளில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், மழையை குளிர்ச்சியாக அனுபவித்து, முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். அன்னதானப்பட்டி, சங்ககிரி பிரதான சாலையில், மழைநீர் வெளியேற வழியின்றி, சாலையில் குளம்போல் தேங்கியது. இதனால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. சில முதியோர், பெண்கள், தடுமாறி விழுந்து காயமடைந்தனர். மேலும், வாகன இன்ஜினில் தண்ணீர் புகுந்ததால், சிலர் தள்ளிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நகரம் முழுவதும், தாழ்வான பகுதிகளில் இதே நிலை நீடிப்பதால், மாநகராட்சி அதிகாரிகள், முழுமையான வடிகால் அமைப்பு ஏற்படுத்தி, சாலையில் மழைநீர் தேங்காதபடி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சாலை சீரழியும்: சேலம், உத்தமசோழபுரம் - பூலாவரி இடையேவுள்ள ஆத்துக்காடு பாலம், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. இதனால், திருமணிமுத்தாற்றில் வரும் ரசாயன கழிவு, சாயக்கழிவால், பாலத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு, தடுப்பு உடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. 10 நாளுக்கு முன் பெய்த கனமழையால், பாலம், வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது, தண்ணீர் படிப்படியாக குறைந்தபோதும், பாலத்துக்கு முன்புறம் தார்ச்சாலை அரிக்கப்பட்டு, புதிதாக கழிவுநீர், அந்த வழியாக செல்ல தொடங்கியுள்ளது. இதனால், சாலை சேதமடையும் ஆபத்து உள்ளதால், அதிகாரிகள், உடனடியாக மண் கொட்டி, கழிவுநீரை பாலத்தின் கீழ் மட்டும் செல்லும்படி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நிரம்பிய புதுஏரி: சேலம், சூரமங்கலத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இஸ்மாயில்கான் எனும் புதுஏரி, சமீபத்தில் பெய்த தொடர் மழையால் நிரம்பியுள்ளது. இதனால், கலெக்டர் ராமன், நேற்று, ஏரியை பார்வையிட்டார். அப்போது, நீர் வழித்தடங்கள், நீர்பிடிப்பு பகுதி, உபரிநீர் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை தூர்வாரி, தடையின்றி நீர் வெளியேற, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மதகுகளை சீரமைத்து, எந்த பாதிப்பும் ஏற்படாதபடி, நடவடிக்கையை கையாள, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாநகராட்சி கமிஷனர் சதீஷ், டி.ஆர்.ஓ., திவாகர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X